புதுச்சேரி பேச்சு
எங்கள் அழைப்பை ஏற்று வந்த உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதை நான் ஒப்புக்காக சொல்லவில்லை. என் ள்ளத்தில் இருந்து சொல்கிறேன்.
ஒரு முறை என் தந்தை பப்ளிஷரோடு பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் எமன் என்னை அழைக்க வந்தால், அவனிடம் கொஞ்சம் டைம் கொடு. ஏஜெண்டுகள் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்ற வரத்தைக் கேட்பேன் என்றார். அந்த அளவுக்கு உங்கள் மீது பாசம் வைத்திருந்தார். எந்த நேரமும் உங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.
பப்ளிஷர் உங்கள் மீது வைத்திருந்த அன்பும், நீங்கள் அவருக்கு கொடுத்த ஆதரவையும் நான் அறிவேன். ஆலமரம் புயலிலும் மழையிலும் கீழே விழாமல் அதன் விழுதுகள் தாங்கிப்பிடிக்கும்.
குமுதமும் ஒரு பெரும் புயலில் சிக்கியது. கடலூர், புதுவையை தாக்கிய 'தானே புயல்' போல. ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல, நீங்கள் குமுத்த்தை தாங்கினீர்கள். எத்தனை தானே புயல் வந்தாலூம், குமுதம் என்ற ஆலமரம் விழாது என்ற சரித்திரத்திரத்தைப் படைத்துவிட்டோம். ஆம்... சமீபத்தில் வந்த ஐ.ஆர்.எஸ் ரிப்போர்டில் குமுதம் முதலிடத்தில் நீடிக்கிறது. இதற்காக உங்களுக்கு மட்டுமல்ல, வெயிலயும் மழையையும் பொருள்படுத்தாது உங்களை ஊக்கப்படுத்தும் உங்கள் மனைவிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
நீங்கள் உங்களை அறியாமலேயே மாபெரும் சேவையை சமூகத்துக்கு செய்து வருகிறீர்கள். இன்றைக்கு படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. டி.வி.க்களைப் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதையும் தாண்டி, மக்களைப் படிக்க தூண்டி வருகிறீர்கள். உங்களின் இந்த சேவையை சரித்திரம் ஒருநாள் பேசும்.
குமுதம் வெறும் பொழுதுபோக்காக படிக்கக் கூடிய புத்தகம் மட்டுமல்ல. பல அரிய சேவைகளை செய்து வருகிறது. எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறது. பெண்களின் பெருமையை உயர்த்த குமுதம் சிநேகிதி பாடுபட்டு வருகிறது. பல நல்ல அரசியல் மாற்றங்களை குமுதம் ரிப்போர்ட்டர் கொண்டு வந்துள்ளது. பல கோயில்களை புணரமைக்கும் பணியை குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி செய்து வருகிறது. இலக்கிய பணியை தீராந்தி செய்து வருகிறது.
குமுதம் குழுமத்தின், குடும்பத்தின் உறுப்பினர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். இங்கிலாந்து பிரதமர் கேமரூன், "இந்தியாவைப் பார்த்து எப்படி குடும்பங்களாக வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்றார். அந்த பண்பாட்டை குமுதம் இன்னமும் காப்பாற்றி வருகிறது. வாழையடி வாழையாக பலர் குமுதம் ஏஜெண்டுகளாக உள்ளனர். ஓரே பத்திரிகையாக இருந்த குமுதம், இப்போது ஒன்பது பத்திரிகையாக உயர்ந்துள்ளது. உங்களின் அன்பும் ஆதரவும் இருந்தால் இன்னும் பல பத்திரிகையை நாங்கள் ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.
நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக